​​ நாட்டிலேயே முதன்முறையாக இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த தகவல் சேகரிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டிலேயே முதன்முறையாக இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த தகவல் சேகரிப்பு

நாட்டிலேயே முதன்முறையாக இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த தகவல் சேகரிப்பு

Aug 31, 2018 11:04 PM

நாட்டிலேயே முதன்முறையாக இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த தகவல்களை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது சேகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் கிரண் ரிஜூஜூ மற்றும் செயலாளர் ராஜீவ் கவ்பாவுடன் ஆலோசனை நடத்தினர். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக்குப் பின் நடைபெற்ற இந்த ஆலோசனையில், மூத்த அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதில், 2021-ம் ஆண்டு தொடங்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் புதிய தொழில்நுட்ப வடிவங்களைப் புகுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தகவல்களை மூன்று ஆண்டுகளில் சேகரித்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரின் எண்ணிக்கை குறித்த தகவல்களையும் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.