​​ ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை

Published : Aug 31, 2018 9:47 PM

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை

Aug 31, 2018 9:47 PM

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம், மத்திய அமலாக்கத்துறையினர், நான்காவது முறையாக விசாரணை மேற்கொண்டனர்.

2006ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இந்த முதலீட்டிற்கு, அந்நிய முதலீடு வளர்ச்சி வாரியத்தின் தடையில்லா சான்று பெற கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், அண்மையில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், அமலாக்கத்துறையினர், நான்காவது முறையாக, வெள்ளிக்கிழமையன்று, ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொண்டனர். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டு, ப.சிதம்பரம் விசாரிக்கப்பட்டார்.