​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிம்ஸ்டெக் தலைமைப் பொறுப்பு இலங்கை அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது

Published : Aug 31, 2018 8:51 PM

பிம்ஸ்டெக் தலைமைப் பொறுப்பு இலங்கை அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது

Aug 31, 2018 8:51 PM

பிம்ஸ்டெக் நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு முடிவடைந்தது. இதில், இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய 7 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். மாநாட்டின் நிறைவாக பிம்ஸ்டெக் நாடுகளிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கையெழுத்திட்டனர்.

மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, வங்கக் கடலோர பிராந்தியத்தில், அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ பிம்ஸ்டெக் நாடுகள் உறுதி பூண்டுள்ளதாக, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தமது நிறைவுரையில் குறிப்பிட்டார். பின்னர், பிம்ஸ்டெக் தலைமைப் பொறுப்பை இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் ஒப்படைத்த சர்மா ஒலி, அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.