​​ புலி, சிங்கம், கழுதைப்புலிக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாய்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புலி, சிங்கம், கழுதைப்புலிக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாய்

Published : Aug 31, 2018 1:15 AM

புலி, சிங்கம், கழுதைப்புலிக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாய்

Aug 31, 2018 1:15 AM

சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில், நாய் ஒன்று தனது குட்டிகளுடன், புலிக்குட்டி, சிங்கக்குட்டி, கழுதைப்புலிக்குட்டி ஆகியவற்றையும் பாலூட்டி பராமரித்து வருகிறது.

பீஜிங் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் கோல்டன் ரீட்ரீவர் ரக தாய் நாய் இந்த பெருமையைப் பெற்றுள்ளது. 2 செர்பிய புலிக்குட்டிகள், ஒரு வெள்ளைப்புலிக்குட்டி, 2 கழுதைப்புலிக்குட்டிகள், ஒரு ஆப்பிரிக்க சிங்கக்குட்டி என 6 குட்டிகளுடன், தான் பிரசவித்த 2 குட்டிகளுக்கும் கோல்டன் ரீட்ரீவர் நாய் பாலூட்டி வருகிறது.

சிங்கக்குட்டியும், புலிக்குட்டியும் ஒன்றாக வளர்வது வழக்கம்தான் என்றாலும், 5 வித உயிரினங்களின் குட்டிகள் ஒன்றாக ஒரே அறையில் வளர்வது மிகவும் அபூர்வம் என்று உயிரியல் பூங்கா நிர்வாகிகளே வியப்பு நீங்காமல் கூறுகின்றனர். 5 விதமான குட்டிகள் துறுதுறுப்பாக விளையாடுவதைப் பார்ப்பதை விட , இவற்றையெல்லாம் பாலூட்டி வளர்க்கும் தாய் நாயை பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டு வருகின்றனர்.