​​ வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக ரூ. 2 கோடி மோசடி என புகார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக ரூ. 2 கோடி மோசடி என புகார்

வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக ரூ. 2 கோடி மோசடி என புகார்

Aug 30, 2018 11:20 PM

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தவர்களை கைது செய்யக் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் அதிகமானோர், இந்தப் புகாரை அளித்துள்ளனர். அசோக் நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக அளித்த ஆன்லைன் விளம்பரத்தை நம்பி, விண்ணப்பித்தபோது தலா 2 லட்ச ரூபாய் வசூலித்ததாக அவர்கள் கூறினர்.

உறுதியளித்தபடி 2 மாதங்களில் வேலைக்கு அனுப்பவில்லை என்றும், பணத்தை திருப்பி கேட்டபோது தாமதப்படுத்தி வந்ததாகவும் அவர்கள் புகார் கூறினர். இந்நிலையில்,கடந்த வாரம் அலுவலகத்தை பூட்டிவிட்டு அந்நிறுவனத்தினர் தலைமறைவாகிவிட்டதால், தாங்கள் செலுத்திய பணத்தை மீட்டுத் தருமாறு புகாரில் தெரிவித்துள்ளனர்.