​​ பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

Aug 30, 2018 11:07 PM

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை  வங்கிகளில் செலுத்தி விட்டதால் மட்டுமே அது கணக்கில் காட்டப்பட்டதாக ஆகாது என்றார். பணமதிப்பிழப்பிற்கு முன்னர் 4.3 கோடி பேர் வருமான வரி செலுத்திய நிலையில், தற்போது 6.86 கோடி பேர் வருமான வரி செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

6.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்து வருமான வரி வசூல், இப்போது 10.02 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டிற்கு நன்மை செய்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் தவறான தகவல்கள் பரப்புவதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.