​​ TV அதிகம் பார்ப்பது தென்னிந்தியர்களே..! ஆய்வில் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
TV அதிகம் பார்ப்பது தென்னிந்தியர்களே..! ஆய்வில் தகவல்

TV அதிகம் பார்ப்பது தென்னிந்தியர்களே..! ஆய்வில் தகவல்

Aug 30, 2018 10:37 PM

நாட்டின் பிற மாநிலங்களை விட தென்மாநிலங்களிலேயே டிவி பார்ப்போர் எண்ணிக்கை மிக அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை மற்றும் ஆய்வு செய்யும் அமைப்பான பார்க் நாடு முழுக்க உள்ள 4300 ஊர்கள் மற்றும் நகரங்களில் 3 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளாவை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் 25 கோடியே 90 லட்சம் குடும்பங்களில் டிவி இருப்பதும், வட இந்தியாவில்20.9 கோடி குடும்பங்களிலும், மேற்கு மாநிலங்களில் 22.1 கோடி குடும்பங்களிலும், கிழக்கு மாநிலங்களில் 14.6 கோடி குடும்பங்களிலும் டிவி உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் மற்ற மாநிலங்களை விட தென்னிந்தியாவில் 95 சதவிகித வீடுகளில் டிவி இருப்பதும், ஆண்டுக்கு ஆண்டு தென்னிந்தியர்கள் டிவி பார்க்கும் நேரம் அதிகரித்து வருவதும் தெரியவந்துள்ளது. தென்னிந்தியாவில் பத்து பேரில் 8 பேர் தினந்தோறும் சராசரியாக 4 மணி பத்து நிமிடங்கள் டிவி பார்ப்பதாக பார்க் கூறியுள்ளது.