​​ அமெரிக்காவில் நிதி இல்லாததால் அரசு அலுவலகங்கள் மூடப்படும் நிலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் நிதி இல்லாததால் அரசு அலுவலகங்கள் மூடப்படும் நிலை

Published : Jan 22, 2018 4:45 PM



அமெரிக்காவில் நிதி இல்லாததால் அரசு அலுவலகங்கள் மூடப்படும் நிலை

Jan 22, 2018 4:45 PM

அமெரிக்காவில் அரசு செலவீனங்களுக்கான நிதி மசோதாவுக்கு ஜனநாயக கட்சியின் செனட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அரசின் அன்றாட செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் நிதிஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற 60 உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் குடியரசுக் கட்சியின் 51 உறுப்பினர்களின் ஒப்புதல் மட்டுமே கிடைத்துள்ளது.

நாட்டில் குழந்தைகளாக வரும் அகதிகளை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இதற்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஒப்புக் கொள்ளாததால் நிதி மசோதாவால் அரசு நிர்வாகம் முடக்கத்தை சந்தித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையுடன் அரசு நிறுவனங்களில் நிதி காலியான நிலையில், ஜனநாயக கட்சி செனட்டர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.