​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனிஷ்க் கோல்ட் நிறுவன சொத்துக்களை முடக்க தடை கோரிய மனுவிற்க்கு பதிலளிக்க அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவு

Published : Aug 30, 2018 3:04 PM

கனிஷ்க் கோல்ட் நிறுவன சொத்துக்களை முடக்க தடை கோரிய மனுவிற்க்கு பதிலளிக்க அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவு

Aug 30, 2018 3:04 PM

கனிஷ்க் கோல்ட் நிறுவன சொத்துக்களை முடக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு குறித்து பதிலளிக்க, அமலாக்கப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்றச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கனிஷ்க் கோல்டு நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டது. ஆனால், தங்கள் வங்கிக்கு 820 கோடி ரூபாய் அளவுக்கு கனிஷ்க் கோல்டு நிறுவனம் கடன் பாக்கி வைத்துள்ளதாகவும், அமலாக்கப் பிரிவு உத்தரவால் இந்த கடன் தொகையை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அமலாக்கப்பிரிவின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பாரத ஸ்டேட் வங்கி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், மனு குறித்து செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.