​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

Published : Aug 30, 2018 2:58 PM

திருப்பதி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

Aug 30, 2018 2:58 PM

திருப்பதி அருகே லாரியில் கடத்திச் செல்ல முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரைக் கைது செய்தனர்.
திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார், புத்தூர் - நகரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, அதில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 100 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ததோடு, திருப்பதியைச் சேர்ந்த பாலவரதன் ரெட்டி மற்றும் ஓட்டுனர் மணியை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.