​​ வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது

Aug 30, 2018 2:36 AM

கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

மாலை வேளையில், வாத்தியங்கள் முழங்க, கடற்கரைசாலை, ஆரியநாட்டுத்தெரு வழியாக கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதன் முடிவில், தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்த பின், மாதாவின் வாழ்த்துப்பாடல் முழங்க, கொடியேற்றப்பட்டது....

மாதாவை வாழ்த்தி பக்தர்கள் எழுப்பிய வாழ்த்தொலிகளோடு, கொடி ஏற்றப்பட்டதும், வண்ண வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு, வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. முடிவில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், வண்ண விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கவிடப்பட்டது....