​​ ஆசை 3 ½ கோடி, கிடைத்தது தெரு கோடி..! ஓட்டுனரின் பரிதாப பாடம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசை 3 ½ கோடி, கிடைத்தது தெரு கோடி..! ஓட்டுனரின் பரிதாப பாடம்

Published : Aug 30, 2018 2:30 AMஆசை 3 ½ கோடி, கிடைத்தது தெரு கோடி..! ஓட்டுனரின் பரிதாப பாடம்

Aug 30, 2018 2:30 AM

சாம்சங் நிறுவனம் மூன்றரை கோடி ரூபாய் பரிசு அறிவித்திருப்பதாக மெயில் அனுப்பி மதுரையை சேர்ந்த கார் ஓட்டுனரிடம் 16 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் அரங்கேரி உள்ளது. மூன்றரை கோடியை நம்பி 3 பேர் தெருக்கோடிக்கு வந்த பரிதாப பின்னணி 

மதுரையை சேர்ந்த ருக்குராஜா என்ற கார் ஓட்டுனர் தான் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இருவரை நம்பி 16 லட்சம் ரூபாயை பறி கொடுத்த பரிதாபத்துக்கு உரியவர்..!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் செல்போனில் விளையாட்டு ஒன்றை டவுன்லோடு செய்து விளையாடி உள்ளார். அந்த விளையாட்டில் பங்கெடுக்க வேண்டுமானால் இ மெயில் முகவரி கட்டாயம் என்பதால் தனது இ மெயில் முகவரியை பதிவிட்டுள்ளார்.

மரு நாளே சாம்சங் நிறுவனத்தின் பெயரில் பரிசு அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. மூன்றரை கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

அதை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் மேலும் தீவிரவாத தொடர்பு இல்லை என்பதற்கு தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும் அந்த சான்று கிடைத்தால் தான் பணம் கைக்கு வரும் என்று கூறி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை குறிபிட்ட வங்கி கணக்கில் செலுத்தச் சொல்லி இருக்கின்றனர்.

அதை நம்பி ருக்குராஜா பணத்தை கட்டி உள்ளார். அவர்கள் பதிலுக்கு மெயிலில் சான்றிதழ் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இப்படி இமெயில் வழியாக பேசி மெல்ல மெல்ல புது புது காரணாங்களை சொல்லி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் உங்களுக்கு சேர வேண்டிய மூன்றரை கோடி ரூபாய் டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்கு வந்துவிட்டது என அழைத்துள்ளனர். இதனை நம்பி தான் கடன் பெற்ற திருப்பூர் பணியன் நிறுவன உரிமையாளரை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து அவர்களை சந்தித்த இரு இங்கிலாந்து நாட்டுக்காரர்கள் அவர்களிடம் பணம் தயாராக உள்ளது அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறி வங்கி கணக்கின் மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை கறந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பணம் வீடுதேடி வரும் என்று அனுப்பி உள்ளனர்.

ருக்குராஜா மட்டுமல்ல அவரை நம்பி இந்த பரிசுதொகைக்கு ஆசைப்பட்டு பணம் கொடுத்தவர்கள் 15 பேர். இவர்களில் ருக்குராஜா, பனியன் நிறுவன உரிமையாளர், உள்ளிட்ட 3 பேர் கடனாளியாகி நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர்.

இதுவரை 16 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துள்ள அந்த கும்பல் அனைத்து பணத்தையும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேசனல் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் கணக்குகளில் டெபாசிட் செய்தே பெற்றுள்ளனர்.

இது குறித்து விசாரிக்க சென்றால் வங்கி அதிகாரிகள் முறையான ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று மோசடியாக பணத்தை பெற்ற வாடிக்கையாளரின் விவரத்தை கொடுக்க மறுப்பதாகவும் பேராசையால் பணத்தை இழந்து தவிக்கும் ருக்குராஜா தெரிவிக்கிறார்.

திருப்பூர் காவல்துறையில் புகார் அளித்து சில மாதங்கள் கடந்த நிலையிலும் போலீசார் எந்த விசாரணையையும் மேற்கொள்ள வில்லை என்றும் தற்போது வரை 50 ஆயிரம் ரூபாயை மற்றொரு வங்கி கணக்கில் செலுத்தினால் மூன்றரை கோடி ரூபாய் கைக்கு வருமென அந்த மோசடிகாரர்கள் செல்போன் மூலம் பேசிவருவதாக வேதனை தெரிவிக்கிறார்.

பணம் பத்தும் செய்யும் என்பார்கள்....முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் கடனாக பணம் தருவதாக சொன்னால் கூட அதன் பின்னணி என்ன என்று சிந்தியுங்கள்..! இல்லையெனில சில கோடி ரூபாய் பரிசு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பல லட்சங்களை பறிகொடுத்து தெருக்கோடிக்கு வர நேரிடும்..! என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

  1. Ramraj.s

    rukuraja ippa mukuraja nalla appu vasutanugala

    Reply