​​ மாவோயிஸ்டு அமைப்புகள் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் ரகசிய தொடர்பு - உளவுத்துறை தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாவோயிஸ்டு அமைப்புகள் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் ரகசிய தொடர்பு - உளவுத்துறை தகவல்

மாவோயிஸ்டு அமைப்புகள் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் ரகசிய தொடர்பு - உளவுத்துறை தகவல்

Aug 29, 2018 10:27 PM

மாவோயிஸ்டு அமைப்புகள் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் ரகசிய தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் ((Bhima-Koregaon)) கலவரம் தொடர்பான விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட சில கடிதங்கள், மற்றும் காஷ்மீரில் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் உளவுத்துறை இதனை தெரிவித்துள்ளது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி செய்வது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட் இயக்கங்களை வலுப்படுத்தும் வகையில் 15 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீரின் அனந்த்நாக், பட்காம், பாரமுல்லா குப்வாரா, ஷோபியான் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.