​​ புதுச்சேரியில் மருத்துவ மேற்படிப்பு மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் மருத்துவ மேற்படிப்பு மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை

புதுச்சேரியில் மருத்துவ மேற்படிப்பு மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை

Aug 29, 2018 10:13 PM

புதுச்சேரியில் மருத்துவ மேற்படிப்பு மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாரிவேந்தன் என்பவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, புதுச்சேரியில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் எம்.டி. படித்து வந்தார்.

இதனால், அரியூரில் உள்ள அருண் நகரில் வீடு எடுத்து தங்கியிருந்த பாரிவேந்தன், இன்று காலை படுக்கையறையில் சுயநினைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சக மாணவர்கள், பாரிவேந்தனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலிசார், பாரிவேந்தன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்ததுடன், மர்ம முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.