​​ மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்வு..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்வு..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்வு..!

Aug 29, 2018 7:53 PM

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5 சதவீத அகவிலைப்படி, கடந்த மார்ச் மாதத்தில் 7 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது, மேலும் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் 2 சதவீத அகவிலைப்படி உயர்வால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.