​​ இந்தியாவில் இருந்து வெளியேறப் போவதாக வெளியாகும் தகவலுக்கு உபேர் நிறுவனம் மறுப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவில் இருந்து வெளியேறப் போவதாக வெளியாகும் தகவலுக்கு உபேர் நிறுவனம் மறுப்பு

இந்தியாவில் இருந்து வெளியேறப் போவதாக வெளியாகும் தகவலுக்கு உபேர் நிறுவனம் மறுப்பு

Jan 22, 2018 4:40 PM

உபேர் கால் டாக்ஸி நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறப் போவதாக கூறப்படும் தகவலை அந்நிறுவன உயரதிகாரிகள் மறுத்துள்ளனர்.

ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளில் இருந்து உபேர் நிறுவனம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக, அந்நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள ஜப்பானின் Softbank தெரிவித்து இருந்தது.

இந்த தகவலை மறுத்துள்ள உபேர் உயர் அதிகாரிகள், Softbank இன் கருத்து அடிப்படையற்ற ஊகம் என்று கூறியுள்ளது.

இந்திய சந்தையில் தங்களது நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பான நிலையில் இருப்பதாகவும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் பணியாற்ற உறுதி பூண்டிருப்பதாகவும் உபேர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.