​​ வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 780 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 780 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

Published : Aug 29, 2018 1:42 PM

வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 780 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

Aug 29, 2018 1:42 PM

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 780 லிட்டர் எரி சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

வெங்கட்ராயன்பேட்டை, புளியரம்பாக்கம், காழியூர், அத்தி உள்ளிட்ட கிராமங்களில் பாக்கெட்டுகளில் எரிசாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, காழியூர் கிராமத்தில் படவேட்டான் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, கேன்கள் மற்றும் பாலீத்தின் பைகளில் எரிசாராயம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதை போலீசார் தோண்டி எடுத்து பறிமுதல் செய்தனர்.