​​ தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்தத்தை எதிர்த்த வழக்கில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்தத்தை எதிர்த்த வழக்கில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்தத்தை எதிர்த்த வழக்கில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை

Aug 29, 2018 11:55 AM

 தமிழகத்தில் பத்து நகரங்களில் செயல்படுத்த உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான ஒப்பந்தத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் அந்த திட்டப்படி தமிழகத்தில் உள்ள பத்து நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக அந்த நகரங்களில் மின்னணு நிர்வாகம், மொபைல் ஆப் வடிவமைப்பு ஆகியவற்றை செய்ய 100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை எல் அண்ட் டி நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் இதற்கான நடைமுறையில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கவில்லை என்று கூறி ஏஸ்டெக் மிஷனரி என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஒப்பந்த பணிகளை தொடர தடை விதித்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.