​​ இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Aug 28, 2018 11:32 PM

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அந்நாட்டின் டிமோர் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.

டிமோர் தீவில் உள்ள குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் பூமிக்குள் 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிக்கு வந்தனர்.

ஆனாலும் சேத விபரங்கள் தொடர்பாக உடனடி தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.