​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் சதி திட்டம்

Published : Aug 28, 2018 11:30 PM

பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் சதி திட்டம்

Aug 28, 2018 11:30 PM

பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மஹாராஷ்டிரா மாநிலம் பிமா கொரேகான் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த வன்முறையில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரின் வீட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது போன்று, பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்வதற்கு மாவோயிஸ்ட்டுகள் சதி திட்டம் தீட்டியிருந்தது புனே காவல்துறையினருக்கு தெரியவந்தது.

மேலும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்குவதற்கு 8 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர் என்ற பெயரில் எழுதப்படிருந்த கடிதம் வரவரராவ் என்பவரின் பெயரை மறைமுகமாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹைதராபாத்தில் வைத்து கவிஞரும், மாவோயிஸ்ட் சிந்தனையாளருமான வரவரராவை புனே தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதே போன்று மற்றொரு மாவோயிஸ்ட் ஆதரவாளரும், தொழிற்சங்க செயல்பாட்டாளருமான சுதா பரத்வாஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். டெல்லி, மும்பை, ஃபரிதாபாத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பப்பற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.   மேலும் மாவோயிஸ்டுகளுடனான தகவல் தொடர்பு மற்றும் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.