​​ மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை.
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை.

Published : Aug 28, 2018 11:48 AMமேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை.

Aug 28, 2018 11:48 AM

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர்.

சிறுமுகை அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமம் மற்றும் அறிவொளிநகர் பகுதியில் நாய்கள் மற்றும் கால்நடைகளை, கடந்த 3 மாதங்களாக வேட்டையாடி வந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர்.

image

இந்தக் கூண்டில் 4 வயதுடைய ஆண் சிறுத்தை சிக்கியது. இதையடுத்து சிறுத்தை பிடிபட்ட கூண்டுடன் லாரியில் ஏற்றி சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று கூண்டை திறந்து விட்டனர். கூண்டின் கதவை திறந்ததும் சிறுத்தை பாய்ந்தோடியபடி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.