​​ நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே தேர்தல் குறித்து விரைவில் பரிந்துரை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே தேர்தல் குறித்து விரைவில் பரிந்துரை

Published : Aug 28, 2018 11:41 AM

நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே தேர்தல் குறித்து விரைவில் பரிந்துரை

Aug 28, 2018 11:41 AM

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான பரிந்துரைகளை மத்திய சட்ட ஆணையம் விரைவில் வழங்கும் எனத் தெரிகிறது. அரசியல் சாசனத்திலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் இதற்கான திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்து சட்ட ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

சட்டரீதியாக மிகப்பெரிய மாற்றங்களைச் செய்தால் மட்டுமே ஒரே தேர்தல் சாத்தியம் என திட்ட அறிக்கையில் தெரிவித்துள்ள சட்ட ஆணையம், பிரதமர் மற்றும் முதலமைச்சர்களை எம்பி மற்றும் எம்எல்ஏக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட மேலும் பல முக்கிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.