​​ அமராவதி உள்கட்டமைப்புக்கு சுமார் 4 லட்சம் கோடி டாலர் தேவை - சந்திரபாபு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமராவதி உள்கட்டமைப்புக்கு சுமார் 4 லட்சம் கோடி டாலர் தேவை - சந்திரபாபு

அமராவதி உள்கட்டமைப்புக்கு சுமார் 4 லட்சம் கோடி டாலர் தேவை - சந்திரபாபு

Aug 28, 2018 1:02 AM

ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இரண்டு முதல் 4 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படுவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அமராவதி கடன் பத்திரம் மும்பை பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இதன் மூலம் 2000 கோடி ரூபாய் திரட்டப்படுவதாக கூறினார். இந்த கடன் பத்திரம் வெளியீடு வெற்றி பெற்றிருப்பது முதலீட்டாளர்கள் தமது அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், பசுமை கட்டடங்கள் உள்ளிட்டவற்றுடன் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரமாக அமராவதி இருக்கும் என்று அவர் கூறினார். ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சி 2029 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி டாலரை எட்டும் என்றும் சந்திரபாபு நம்பிக்கை தெரிவித்தார்.