​​ 2004- மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாஜ்பாய் விரும்பவில்லை - வாஜ்பாயிடம் உதவியாளராக இருந்தவர் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2004- மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாஜ்பாய் விரும்பவில்லை - வாஜ்பாயிடம் உதவியாளராக இருந்தவர் தகவல்

2004- மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாஜ்பாய் விரும்பவில்லை - வாஜ்பாயிடம் உதவியாளராக இருந்தவர் தகவல்

Aug 28, 2018 12:46 AM

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டாம் என மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தெரிவித்த போதும், கட்சியின் அழுத்தம் காரணமாகவே அந்த முடிவை அவர் ஏற்றதாக அவரிடம் 50 ஆண்டுகள் உதவியாளராக இருந்த சிவ்குமார் பரீக் தெரிவித்துள்ளார்.

பேட்டி ஒன்றில் வாஜ்பாயுடனான நினைவுகளைப் பகிர்ந்த அவர், 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோம் என வாக்குப் பதிவுக்கு முன்பே அவர் கணித்து தம்மிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். தாம் அதை மறுத்த போது,  மக்களிடையே பிரச்சாரம் செய்யும் தமக்கு தெரியும் என வாஜ்பாய் பதிலளித்ததாகவும் பரீக் குறிப்பிட்டுள்ளார். வாஜ்பாய் காலத்தில் பாஜகவுக்கும்-தொண்டர்களுக்கும் இடையே இருந்த நல்ல ஒத்துழைப்பு தற்போது இல்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.