​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பயமில்லா கற்றல் விழிப்புணர்வு சுவரொட்டியை அறிமுகம் செய்த செங்கோட்டையன்

Published : Aug 27, 2018 10:34 PM

பயமில்லா கற்றல் விழிப்புணர்வு சுவரொட்டியை அறிமுகம் செய்த செங்கோட்டையன்

Aug 27, 2018 10:34 PM

தமிழகத்தில் 57 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில், பயமில்லா கற்றல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டி இடம்பெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவ, மாணவிகளை பாலியல் தொல்லைகளிலிருந்து காக்கும்நோக்கில், 'குட் டச் பேட் டச்' குறித்து விளக்கும் விழிப்புணர்வு சுவரொட்டியை, யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து பள்ளிக்கல்வித் துறை வடிவமைத்துள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், யுனெஸ்கோ அதிகாரிகள் சுவரொட்டியை அறிமுகப்படுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பள்ளி மாணவ, மாணவிகள் பாடத்திட்டங்கள் குறித்து சந்தேகம் கேட்க ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 14417 அவசர உதவி எண்ணில், பாலியல் தொல்லை குறித்தும் புகார் அளிக்கலாம் என்று கூறினார். அனைத்து பள்ளிகளிலும் வாரத்தில் ஒரு நாள் 'குட் டச் பேட் டச்' குறித்த வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.