​​ பிரபல பாடகர் உதித் நாராயணின் மகன் ஆதித்யா கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரபல பாடகர் உதித் நாராயணின் மகன் ஆதித்யா கைது


பிரபல பாடகர் உதித் நாராயணின் மகன் ஆதித்யா கைது

Mar 13, 2018 6:35 AM

பாடகர் உதித் நாராயணனின் மகன் ஆதித்ய நாராயண், கார் ஓட்டிச் சென்றபோது விபத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த பிரபல பாடகரான அவர், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

இவரது மகன் ஆத்திய நாராயண், தனது மெர்சிடஸ் காரை ஓட்டிச் சென்றபோது ஒரு ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். லோகந்த்வாலா பேக் ரோடு ((Lokhandwala Back Road )) பகுதியில் நேரிட்ட விபத்தில், ஆட்டோ ஓட்டுநரும், பெண் பயணி ஒருவரும் படுகாயமுற்றனர். இதுகுறித்த புகாரில் அதிவேகமாக காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக, ஆதித்யா நாராயணை போலீசார் கைது செய்தனர்.