​​ பதிவுத்துறை உள்பட 41 துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பதிவுத்துறை உள்பட 41 துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு


பதிவுத்துறை உள்பட 41 துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு

Aug 27, 2018 9:02 PM

டி.என்.பி.எஸ்.சி. குரூப்2-ஏ தேர்வில் வெற்றிபெற்று, நேர்முகத் தேர்வு இல்லாதப் பணியிடங்களுக்கான முதல்நாள் கலந்தாய்வு, சென்னையில் இன்று நடைபெற்றது.

பதிவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, மீன்வளத்துறை உள்பட 41 துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு குரூப்2-ஏ தேர்வு நடத்தப்பட்டது. அதில், தகுதி மதிப்பெண் பெற்ற 3 ஆயிரத்து 952 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் நாள் கலந்தாய்வுக்கு 100 பேர் அழைக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி வரை நாள்தோறும் 100 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், பிராட்வேயில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் புதிதாக திறக்கப்பட்ட கூடத்தில் முதல்நாள் கலந்தாய்வு நடைபெற்றது.