​​ பிரதமர் மோடி புதிதாக 55 பெண்களின் டிவிட்டர் கணக்குகளை பின்தொடர்கிறார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி புதிதாக 55 பெண்களின் டிவிட்டர் கணக்குகளை பின்தொடர்கிறார்

பிரதமர் மோடி புதிதாக 55 பெண்களின் டிவிட்டர் கணக்குகளை பின்தொடர்கிறார்

Aug 27, 2018 8:45 PM

ரக்சா பந்தனை ஒட்டி 55 பெண்களின் டிவிட்டர் பக்கங்களை  பிரதமர் மோடி, பின்தொடரத் தொடங்கியுள்ளார்.

பிரதமர் மோடி தனது தனிப்பட்ட டிவிட்டர் கணக்கின் மூலமாக ஏற்கெனவே 2 ஆயிரம் பேரைப் பின் தொடர்கிறார். இந் நிலையில், ரக்சா பந்தனை ஒட்டி புதிதாக 55 பெண்களின் டிவிட்டர் பக்கங்களை மோடி பின் தொடரத் தொடங்கியுள்ளார்.

விளையாட்டு வீராங்கனைகள் அஸ்வினி பொன்னப்பா, சானியா மிர்சா, பி.டி.உஷா, சமூக ஆர்வலர்கள் ஸ்வேதா சிங், பத்மஜா ஜோசி  பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்குகளை பிரதமர் மோடி நேற்று முதல் பின்தொடர்கிறார்.