​​ தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Published : Aug 27, 2018 5:47 PM



தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Aug 27, 2018 5:47 PM

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வட தமிழகப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும், வெப்பச்சலனத்தாலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, பெரம்பலூர், மதுரை, தெற்கு காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் தலா 1 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.