​​ 168 ஆண்டுகள் பழமையான மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
168 ஆண்டுகள் பழமையான மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

168 ஆண்டுகள் பழமையான மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Aug 27, 2018 4:58 PM

கன்னியாகுமரியிலுள்ள 168 ஆண்டுகள் பழமையான நட்சத்திர மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த சிலையை வணங்கிய பின்னரே மீனவர்கள் கடலுக்குச் செல்வது வழக்கம். காலை இந்த சிலையின் தலை உடைபட்டு இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், கன்னியாகுமரி - கோவளம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மாற்றுப் பாதைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.