​​ டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது

டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது

Aug 27, 2018 3:56 PM

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்துப் பேசுவதற்காக டெல்லியில் தேர்தல் ஆணையம் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தல், மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தல் ஆகியவற்றை நடத்துவது குறித்துப் பேசுவதற்காக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசியக் கட்சிகள், 51மாநிலக் கட்சிகளுக்கு இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் தலைமையில் தொடங்கியுள்ளது.

தேர்தல் ஆணையர்கள் சுனில் அரோரா, அசோக் லாவாசா ஆகியோரும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், அரசியல் கட்சிகளின் செலவுக்கு உச்சவரம்பு விதித்தல், வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதற்கான கோரிக்கை ஆகியவை பற்றிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.