​​ நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளை குறுகிய தூரத்துக்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளை குறுகிய தூரத்துக்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்


நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளை குறுகிய தூரத்துக்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Aug 27, 2018 3:19 PM

நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறைந்த தூர ஊர்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூரில் இருந்து கோவைக்கு படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னையில் இருந்து கரூர் வரும் அரசு போக்குவரத்துக் கழக சொகுசுப் பேருந்துகள் இரவு மீண்டும் சென்னைக்கு புறப்படும் வரை பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தப் பேருந்துகள் குறைந்த தூரமாக கோவை வரை சோதனை முறையில் இயக்கப்பட இருப்பதாக அவர் கூறினார். இதுபோன்று பிற வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.