​​ Filmfare திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகையாக வித்யா பாலன் தேர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
Filmfare திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகையாக வித்யா பாலன் தேர்வு

Filmfare திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகையாக வித்யா பாலன் தேர்வு

Jan 22, 2018 4:31 PM

பிலிம்பேர் திரைப்பட விருதுகள் விழாவில் நடிகை வித்யா பாலன் சிறந்த நடிகையாக தேர்வு பெற்றார். 63வது பிலிம்பேர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகைகளுக்கான பரிந்துரைகளில் தும்ஹாரி சுலு படத்தில் நடித்த வித்யா பாலன் விருதைத் தட்டிச் சென்றார்.

வித்யா பாலனுக்கு மூத்த நடிகை ரேகா விருதை வழங்கினார். சிறந்த நடிகருக்கான விருதை இர்பான் கான் பெற்றார். சிறந்த படமாக இந்தி மீடியம் படம் தேர்வானது. சிறந்த இயக்குனருக்கான விருதை பரேலி கி பர்பி படத்திற்காக பெண் இயக்குனர் அஸ்வினி அய்யர் பெற்றுக் கொண்டார்.