​​ தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளையால் பயணிகள் அதிர்ச்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளையால் பயணிகள் அதிர்ச்சி

Published : Aug 27, 2018 11:33 AM

தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளையால் பயணிகள் அதிர்ச்சி

Aug 27, 2018 11:33 AM

ஓணம் பண்டிகை முடிந்து குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை திரும்பிய பயணிகளிடம் விமானக்கட்டணத்தை விட அதிகமாக சில தனியார் பேருந்துகள் கட்டணம் வசூலித்தது பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓணம் பண்டிகைக்காக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்றவர்கள், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று புறப்பட்டனர். அரசுப் பேருந்துகள் கிடைக்காததை சாதகமாகப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் பலமடங்கு அதிக கட்டணம் வசூலித்தன. சென்னைக்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கும் பேருந்துகளில் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை அடாவடி வசூல் செய்யப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சுற்றுலா என்ற பெயரில் அனுமதி வாங்கியுள்ள சில பேருந்துகள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி விமானக் கட்டணம் அளவுக்கு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹெப்ரான் டிராவல்ஸ், ஆரஞ்சு டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ், ஒய் பி எம் டிராவல்ஸ் போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த பேருந்துகள் மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை வருவதற்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமாக வசூலித்ததாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

வழக்கமாக இயக்கப்படும் கல்லடா டிராவல்ஸ் பேருந்துகளும் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துமாறு பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.