​​ நெல்லையில் நடைபெற்ற கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லையில் நடைபெற்ற கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்பு

Published : Aug 27, 2018 11:25 AM

நெல்லையில் நடைபெற்ற கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்பு

Aug 27, 2018 11:25 AM

எந்த காலகட்டத்தில் எந்த முடிவை எடுக்கவேண்டும் என இந்தியா முழுவதற்கும் கற்றுத்தந்தவர் கலைஞர் என்று அரசியல் கட்சிப் பிரமுகர்கள் புகழாரம் சூட்டினர்.

கலைஞரின் அரசியல் ஆளுமை என்ற தலைப்பில் நெல்லை பாளையாங்கோட்டையில் திமுக சார்பில் புகழ் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய மதிமுக பொதுசெயலாளர் வைகோ, ஆளுமைக்கு உபகண்டத்தின் இலக்கணமாக திகழ்ந்தவர் கருணாநிதி ஒருவர் மட்டுமே என்றார். 29 ஆண்டு திமுக தலைவர் கருணாநிதிக்கு பின்னால் இருந்த தாம், இனி வாழ்நாள் முழுவதும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என்று கருணாநிதியிடம் முன்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டி பேசினார்

நடக்க முடியாததையும் நடக்க வைத்து காட்டியவர் கருணாநிதி என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் புகழாரம் சூட்டினார். எந்த காலகட்டத்தில் எந்த முடிவை எடுக்கவேண்டும் என தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கற்றுத்தந்தவர் கலைஞர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இடதுசாரி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.