​​ அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் : கமல்ஹாசன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் : கமல்ஹாசன்

அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் : கமல்ஹாசன்

Aug 27, 2018 2:42 AM

அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

சுயசக்தி விருதுகள் என்ற பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூர் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9 பெண்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமல்ஹாசன் விருதுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், பெண்கள் அரசியலில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர் பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல், அரசியல் வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்றார். மனிதர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்ததால்தான், அரசியலில் நுழைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.  

திமுக தலைவராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கமல், கலைஞர் நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு வந்தால் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.