​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வருமாறு அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு

Published : Aug 26, 2018 4:24 PM



தமிழக அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வருமாறு அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு

Aug 26, 2018 4:24 PM

அரசுப் பள்ளிகளில் பயின்று உன்னத நிலைக்கு உயர்ந்துள்ள முன்னாள் மாணவர்கள், தாங்கள் விரும்பிய பள்ளியின் கல்வித் தரத்தை மேம்படுத்த முன்வருமாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களின் நலன் கருதி கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்த தமிழக அரசு 27 ஆயிரத்து 205 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், அரசுப் பள்ளிகளில் பயின்று உன்னத நிலையை அடைந்துள்ள முன்னாள் மாணவர்கள், தங்கள் பள்ளி என்ற உரிமையோடும், அன்போடும் தங்கள் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களின் கீழ் தாங்கள் விரும்பிய அரசுப் பள்ளிகளின் நிலையை மேம்படுத்த உதவலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணைய வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை தாங்களாக மனமுவந்து செய்ய விரும்பினால், எவ்வித தாமதமும் இன்றி ஏற்றுக் கொள்ள பள்ளி நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 





  1. mohan

    appo unga vela enathu...????

    Reply