​​ கலசப்பாக்கம் MLA பன்னீர்செல்வத்தை தாக்கியதாக வசந்த மணி என்பவர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலசப்பாக்கம் MLA பன்னீர்செல்வத்தை தாக்கியதாக வசந்த மணி என்பவர் கைது


கலசப்பாக்கம் MLA பன்னீர்செல்வத்தை தாக்கியதாக வசந்த மணி என்பவர் கைது

Jan 22, 2018 4:27 PM

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கிய, அதே கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடந்த அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நேற்றிரவு அங்கு சென்றார். பன்னீர்செல்வத்துக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்துக் கொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான வசந்தம் மணி என்பவர் எம்.எல்.ஏ.வை நெருங்கினார்.

பன்னீர்செல்வத்தின் காலை தொட்டு வணங்கிய வசந்தம் மணி, திடீரென எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தின் முகத்தில் ஓங்கிக் குத்தினார். இதில் பன்னீர்செல்வத்துக்கு உதட்டில் லேசான காயம் ஏற்பட்டது. இதை அடுத்து தொண்டர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்.

தாக்குதல் குறித்து போளூர் காவல்நிலையத்தில் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் வசந்தம் மணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இந்த நிலையில் படவேட்டில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்