​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரியில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம்..!

Published : Aug 26, 2018 12:46 PM



காவிரியில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம்..!

Aug 26, 2018 12:46 PM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி உபரிநீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி உபரிநீரும் திறக்கப்படுகிறது.

 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

image

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து, தற்போது வினாடிக்கு 26,000 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 120 புள்ளி ஒரு அடியாக இருக்கும் நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 25 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.