​​ பிரிவினை சக்திகளை எதிர்த்து நின்று போராடியவர் கலைஞர் கருணாநிதி என நடிகர்- நடிகைகள் புகழாரம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரிவினை சக்திகளை எதிர்த்து நின்று போராடியவர் கலைஞர் கருணாநிதி என நடிகர்- நடிகைகள் புகழாரம்


பிரிவினை சக்திகளை எதிர்த்து நின்று போராடியவர் கலைஞர் கருணாநிதி என நடிகர்- நடிகைகள் புகழாரம்

Aug 26, 2018 12:26 PM

அரசியல் மட்டுமின்றி திரைத்துறையிலும் சாதனைகள் படைத்தவர் மறைந்த திமுக தலைவர் கலைஞர் என்று திரைப்பட நட்சத்திரங்கள் புகழாஞ்சலி செலுத்தினர்.

கோவையில் நடைபெற்ற கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகுமார், அரசியல், கலை, இலக்கியம் ஆகியவற்றில் யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு திகழ்ந்தவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார்.

தமிழர்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் கிடைத்த பொக்கிஷம் கலைஞர் என்று தெலுங்கு நடிகர் மோகன்பாபு தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி, ராஜேஷ், பிரபு, பார்த்திபன், நடிகை ராதிகா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பேசினர்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.