​​ ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஏழாவது தங்கப் பதக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஏழாவது தங்கப் பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஏழாவது தங்கப் பதக்கம்

Aug 25, 2018 10:55 PM

ஆசிய விளையாட்டி போட்டியின் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தர்ஜிந்தர்பால் சிங் தங்கப்பதக்கம் வென்றார். ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர்கள் 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு  தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் தர்ஜிந்தர்பால் சிங், 20.75 மீட்டர் தூரம் குண்டெறிந்து சாதனை படைத்தார். 

முன்னதாக ஸ்குவாஷ் ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், மலேசியாவின் டேவிட் நிக்கோல் அன்னை எதிர்கொண்டார். இதில் 3க்கு 0 என்ற கணக்கில் தோல்வியுற்றதால் தீபிகா பல்லிகலுக்கு வெண்கல பதக்கம் மட்டுமே கிடைத்தது. 

மற்றொரு அரை இறுதியில் மலேசியா வீராங்கனை சிவசங்கரி சுப்ரமணியத்திடம், 3க்கு1 என்ற கணக்கில் தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா தோல்வியுற்றார். அவரும் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதேபோல் ஆடவர் ஸ்குவாஷ் அரை இறுதி சுற்றில் இந்தியாவின் சவுரவ் கோசல், ஹாங் காங் வீரர் சன் மிங் ((Chun ming)) ஐ எதிர்கொண்டார். தோல்வியை தவிர்க்க போராடிய சவுரவ் கோசல், இறுதியில் 3க்கு2 என்ற கணக்கில் தோல்வியை தழுவி வெண்கலம் வென்றார்.

பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, சாய்னா நேவால் ஆகியோர்  காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டில் தற்போது வரை 7 தங்கம், 5 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இதனிடையே ஆசிய விளையாட்டுப்போட்டி டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 20 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்துள்ளார். பிரஜ்னேஷ் குணேஸ்வரன், மேலும் பல வெற்றிகளைப் பெற்று நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பதக்கங்களை குவிக்க வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.