​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேனியில் ஓ.பன்னீர் செல்வத்தின் பேனர்கள் கிழிப்பு

Published : Aug 25, 2018 9:50 PM

தேனியில் ஓ.பன்னீர் செல்வத்தின் பேனர்கள் கிழிப்பு

Aug 25, 2018 9:50 PM

தேனியில் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க விழாவில் கலந்து கொள்ளாத துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து அவரது பிளக்ஸ் பேனர்கள் கிழிப்பட்டன.

தேனியில் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெறுவதாகவும், அதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்வதாக இருந்த அவரை வரவேற்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் விழா ஆரம்பித்து நீண்ட நேரமாகியும் ஓ.பன்னீர்செல்வம் வராததால், ஆத்திரமடைந்த சங்க உறுப்பினர்கள் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்து எரிந்தனர். மேலும், சிலர் தேனி - பெரியகுளம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.