​​ ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மூவர் பலி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மூவர் பலி

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மூவர் பலி

Aug 25, 2018 8:42 PM

ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அருகிலேயே நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டில் வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் சிலருக்கு, தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி, அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, ஜலாலாபாத் நகரில் தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, திடீரென தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில், 3 பேர் கொல்லப் பட்டனர்.