​​ முக்கொம்பு அணை உடைப்பு ஏற்பட்ட பின்பும் மணல் அள்ளப்படுவதாக வைகோ குற்றச்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முக்கொம்பு அணை உடைப்பு ஏற்பட்ட பின்பும் மணல் அள்ளப்படுவதாக வைகோ குற்றச்சாட்டு


முக்கொம்பு அணை உடைப்பு ஏற்பட்ட பின்பும் மணல் அள்ளப்படுவதாக வைகோ குற்றச்சாட்டு

Aug 25, 2018 7:34 PM

திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பின்பும் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். தூத்துக்குடி அருகே முக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் தற்போதைய வெள்ளத்தால் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதாகவும், கட்டுமானப்பணியில் ஊழல் நடப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

செப்டம்பர் 15 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ள ம.தி.மு.க. முப்பெரும் விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் அவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.