​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போடி 18ம் கால்வாய் நீட்டிப்பில் சோதனை ஓட்டத்திற்காக தண்ணீரைத் திறந்து விட்டார் ஓ.பன்னீர்செல்வம்

Published : Aug 25, 2018 6:15 PM



போடி 18ம் கால்வாய் நீட்டிப்பில் சோதனை ஓட்டத்திற்காக தண்ணீரைத் திறந்து விட்டார் ஓ.பன்னீர்செல்வம்

Aug 25, 2018 6:15 PM

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் 18ஆம் கால்வாய் நீட்டிப்புத் திட்டப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, சோதனை ஓட்டத்திற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரைத் திறந்து விட்டார்.

image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கை ஏற்கப்பட்டு தேவாரம் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள சுத்தகங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறு வரை 14.10 கிலோ மீட்டருக்கு இந்தக் கால்வாய் ஏற்படுத்தபட்டுள்ளதாக கூறினார்.

34 கிராமங்கள் வழியாக இந்தக் கால்வாய் செல்வதாகவும், 946.16 ஏக்கர் பரப்பு விளைநிலம் பாசன வசதியைப் பெறும் என்றும் அவர் கூறினார். சோதனை ஓட்டத்திற்காக வினாடிக்கு 200 கனஅடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.