​​ மசினகுடி அருகே யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள 11 ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மசினகுடி அருகே யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள 11 ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ்

Published : Aug 25, 2018 6:12 PM

மசினகுடி அருகே யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள 11 ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ்

Aug 25, 2018 6:12 PM

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே, யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள மேலும் 11 ரிசார்ட்டுகளுக்கு, சீல் வைக்கும் நடவடிக்கைக்காக நோட்டீஸ் வழங்கப்பப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள 27 சொகுசு விடுதிகளுக்கு ஏற்கெனவே சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மசினகுடி அருகே பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 11  ரிசார்ட்டுகளுக்கு வருவாய், வனம் மற்றும் காவல்துறை அடங்கிய குழுவினர் நேரில் சென்று நோட்டீசை வழங்கினர்.

யானைகள் வழித் தடத்தை ஆக்கிரமித்து அந்த ரிசார்ட்டுகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. தவறினால் 11 ரிசார்ட்டுகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றும் நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.