​​ முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

Aug 25, 2018 5:41 PM

பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண்காணிக்கவும், மீட்பு பணிகளை தீவிரப்படுத்தவும் , முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்  அமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்படுள்ள உத்தரவில் இந்த ஆணையத்தின் தலைவராக முதலமைச்சர் இருப்பார் என்றும்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை, நிதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர்கள், வருவாய் நிர்வாக ஆணையர், அண்ணா பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மை மைய இயக்குநர், ஐ.ஐ.டி. சிவில் எஞ்சினியரிங் துறை தலைவர் ஆகியோர்  உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.