​​ தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்துக்கு இன்று 66வது பிறந்தநாள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்துக்கு இன்று 66வது பிறந்தநாள்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்துக்கு இன்று 66வது பிறந்தநாள்

Aug 25, 2018 5:09 PM

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தமது 66-வது பிறந்தநாளை இன்று குடும்பத்தினருடனும், கட்சியினருடனும் கொண்டாடினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதலே தொண்டர்களும், கட்சியினரும் வந்து இனிப்புக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திலும் இன்று இனிப்புக்கள் வழங்கி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தொண்டர்கள், அவரது ரசிகர்கள் என ஏராளமானோர் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.