​​ ஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேச மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேச மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு


ஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேச மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு

Aug 25, 2018 3:29 PM

ஜம்மு - காஷ்மீர், இமாசலப் பிரதேச மாநிலங்களில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் ரம்பான் (Ramban) என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஜம்மு - ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இமாசலப் பிரதேசம் சிம்லா மாவட்டத்தில், மலை கிராமங்களை இணைக்கும் சாலைகளின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய - திபேத் எல்லையில் காவல்துறையினரால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் ஒன்று கனமழையால் மீண்டும் இடிந்து விழுந்தது. இதனால், மலைகிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கரடுமுடான பாதைகள் வழியாக நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.