​​ சுற்றுலா பயணிகளின் படகு அருகே துள்ளிக்குதித்த திமிங்கலம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுற்றுலா பயணிகளின் படகு அருகே துள்ளிக்குதித்த திமிங்கலம்


சுற்றுலா பயணிகளின் படகு அருகே துள்ளிக்குதித்த திமிங்கலம்

Aug 25, 2018 12:59 PM

ஆஸ்திரேலியாவில் தன்னைப் பார்க்க விரும்பியவர்களுக்கு படகின் அருகில் துள்ளிக்குதித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது திமிங்கலம்.

image

ஒவ்வொரு ஆண்டும் அண்டார்க்டிகா பகுதியில் இருந்து, ஆஸ்திரேலிய கடற்கரைக்கு ஹம்பேக் வகைத் திமிங்கலங்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு சிட்னி கடற்கரை பகுதியில் சில திமிங்கலங்கள் தென்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் அதனைக் காண ஆர்வத்துடன் படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 20 டன் எடை கொண்ட பிரமாண்டமான ஹம்பேக் திமிங்கலம் ஒன்று படகில் இருந்து சில அடி தூரத்தில் துள்ளிக் குதித்தது.

இதனைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியும், ஆனந்தமும் அடைந்தனர். தற்போது சிட்னி கடற்கரைப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.